8

1. மருதம் ( 1 )
(
) வேட்கைப் பத்து


8. வாழி யாதன் வாழி யவினி
  அரசுமுறை செய்க களவில் லாகுக
  எனவேட் டோளே யாயே யாமே
  அலங்குசினை மாஅத் தணிமயி லிருக்கும்
  பூக்கஞ லுாரன் சூளிவண்
  வாய்ப்ப தாக வெனவேட் டேமே.

இதுவுமது.

   குறிப்பு. முறை-அறநுாலும் நீதி நுாலும் சொல்லும் நெறி ; குறள்,
388, பரிமேல். அலங்கு சினை மாஅத்து - அசைகின்ற கிளைகளை
யுடைய மாமரத்தில்; மாஅத்து : ஐங். 10 : 4, 61 : 1; குறுந். 8 : 1.
பூக்கஞலுாரன் : ஐங். 3 : 5, குறிப்பு. சூள்-நின்னை விரைவில் மணம்
செய்து கொள்வேன் என்று தெய்வம் சுட்டிக் கூறிய உறுதிமொழி.
வாய்ப்பதாக-நிச்சயமாகப்பலித்திடுக; விரைவில் மணந்துகொள்
வானாக என்றபடி. குறிஞ்சிப். 208-11.                        ( 8 )