101

2. நெய்தல் (11)
தாய்க்குரைத்த பத்து


101. அன்னை வாழிவேண் டன்னை 1யுதுக்காண்
   ஏர்கொடிப் பாசடும்பு பரியவூர் 2பிழிபு
   நெய்தன் மயக்கி வந்தன்று 3நின்மகள்
   பூப்போ லுண்கண் மரீஇய
   நோய்க்குமருந் தாகிய கொண்கன் றேரே.

 எ-து அறத்தோடு நின்றபின்னர் வரைதற்பொருட்டுப் பிரிந்த
தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச்
சொல்லியது.

 (ப-ரை.) தேர் அடும்பு பரிய அதனை ஊர்ந்திழிந்து நெய்தலை
மயக்கி வந்ததென்றது களவிற்கூட்டம் வெளிப்பட்டபின்பும் வரை
யாது பிரிந்தானென்று அலர்கூறுவார் வருந்த வந்தான் எ-று.

குறிப்பு, வேண்டு-விரும்புவாயாக. அன்னை வாழி வேண்
டன்னை; ஐங். 102-10 : 1. வாழி வேண்டன்னை : ஐங். 201-10;
குறிஞ்சி 1; குறுந். 321 : 8; அகநா. 48: 1. உதுக்காண்-அதனைக்
காண் : ஐங். 453 : 2; குறுந். 81 : 4, 191 : 1; கலித். 108 : 39;
புறநா. 307 : 3, பாசடும்பு-பசுமையான அடப்பங்கொடி; பதிற்.
30 : 6; கலித். 127 : 21; அகநா. 160 : 12-3. பரிய-வருந்த. ஊர்பு
இழிபு-ஏறி இறங்கி. நெய்தல் மயக்கி-நெய்தற்பூவைச் சிதைத்து.
தேர் நேமியால் நெய்தல் சிதைதல் : குறுந். 227 : 1-3. பூப்போல்
உண்கண்-தாமரைப் பூப்போன்ற மையுண்ட கண்களில்; ஐங். 16 :
4, குறிப்பு. மரீஇய-மருவிய. கொண்கன்-நெய்தல் நிலத்தலைவன்
கொண்கன் தேர் வந்தன்று, உதுக்காண்.

 (மேற்.) அடி, 1, நன். 179, சங். மு. ‘திணை மயக்குறுதலுள்
நெய்தற்கண் குறிஞ்சி மயங்கி வந்தது? (தொல். அகத். 12, ந,)
  (பி-ம்.) 1 ‘யுவக்காண்? 2 ‘பிழியூஉ? 3 ‘நின்மகளே ;    ( 1 )