2. நெய்தல் (11) தாய்க்குரைத்த பத்து
102. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர் நீனிறப் பெருங்கடற் புள்ளி னானாது துன்புறு துயர நீங்க இன்புற 1விசைக்குமவர் தேர்மணிக் குரலே.
இதுவுமது.
குறிப்பு. கடற் புள்ளின்-கடற் பறவைகளைப் போல. ஆனாது-அமையாமல். இசைக்கும்-ஒலிக்கும். தேர் மணிக்குரல் புள்ளின் ஆனாது இசைக்கும். தேர் மணியொலிக்குப் புள்ளொளி : நற். 178 : 9 ; 287 : 9-10.
(பி-ம்.) 1 ‘விரைக்குமவர்?. ( 2 )