104

2. நெய்தல் (11)
தாய்க்குரைத்த பத்து


104. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்ப்
   பலர்மடி பொழுதி னலமிகச் சாஅய்
   நள்ளென வந்த 1வியறேர்ச்
   செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே.

  எ-து புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கட்சென்ற செவி
லிக்கு முன்பு அறத்தொடுநின்று வதுவைகூட்டிய தோழி அவனூர்
நன்மைகாட்டிச் சொல்லியது.
  (ப-ரை.) செல்வக் கொண்கன் செல்வனென்றது புதல்வனை;
செல்வக் கொண்கன் செல்வனூரென்னும் எழுவாயின் முற்றுச்சொல்
அஃதென்னும் பெயர்.
  குறிப்பு. பலர்மடி பொழுதின்-பலரும் தூங்குகின்ற இராக்
காலத்தே; குறுந். 6 : 1-3, 244 : 1, சாஅய்-மெலிந்து. நள்ளென-
நள்ளென்றும் ஓசையுண்டாக. கொண்கன் செல்வன் ஊர் அஃது.
 (மேற்.) மு. ‘புதல்வற் பெற்றுழித் தலைவன் மனைக்கட் சென்ற
செவிலிக்கு அறத்தோடு நின்று வதுவை கூட்டிய தோழி அவனூர்
காட்டிக் கூறியது? (தொல். கற்பு : 9, ந,) (பி-ம்.) 1 ‘வியன்றேர்ச்?   ( 4 )