எ-து அறத்தொடு நின்றபின் 2வேண்டுவன தருதற்குப் பிரிந்த
தலைமகன் வரைவொடு வந்துழித் தலைமகள் நுதற்கண் முன்புள்ள
பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக்காட்டிச் செவிலிக்குத்
தோழி சொல்லியது.
(ப-ரை.) ஓதத்தால் அலைப்புண்டு போந்த முத்தம் மணற்
கண்ணே கிடந்து விளங்குமென்றது தன் வருத்தம் நோக்காது
நமக்கு நிலைநின்ற இன்பத்தைத் தருவான் எ-று.
குறிப்பு. கடல் திரைதரும்-கடலது அலை அளித்த. இமைக்கும்.
விளங்குகின்ற. வந்தென-வர, சிவந்தன்ற-சிவந்தது. கண்டிசின்-
காண்பாயாக; சின் : முன்னிலையசை; “காப்பும் பூண்டிசின்”
(அகநா. 7 : 5, உரை.) வந்தென நுதல் சிவந்தன்று, கண்டிசின்.
(மேற்.) மு. தோழி கூற்று; நொதுமலர் வரைவு பற்றி வந்த
முன்னிலைக் கிளவி (தொல். களவு. 24, இளம்.)
(பி-ம்) 1 ‘திரிதரு’ 2 ‘வேண்டுவன கொண்டு வருதற்குப்
பிரிந்து’. ( 5 )