எ-து தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது.
குறிப்பு. தோழி என்றது தலைவியை. நுதல் பசத்தல் : குறுந்.
87 : 4, சாஅய்-வருந்தி. படர்-நினைவு; துன்பமுமாம். திரை
அலையொலியை, கேட்டொறும்-கேட்குந்தோறும். ஆகுதல்
ஆகுதலின். நோகு-நோவேன்; ஓ : அசைநிலை. யான் நோகோ
நோகோயானே : நற். 26 : 1; குறுந். 131 : 6; அகநா. 137 : 16. ( 7 )