108

2. நெய்தல் (11)
தாய்க்குரைத்த பத்து


108. அன்னை வாழிவேண் டன்னை கழிய
   முண்டக மலருந் தண்கடற் சேர்ப்பன்
   1எந்தோ டுறந்தன னாயின்
   2எவன்கொன் மற்றவ னயந்த தோளே.

   எ-து அறத்தொடுநிலை பிறந்தபின்னும் வரைவு நீடிற்றாக மற்
றொரு குலமகளை வரையுங்கொலென்று ஐயுற்ற செவிலிகுறிப்பறிந்த
தோழி அவட்குச் சொல்லியது.

  குறிப்பு. கழிய-கழியிலுள்ள. முண்டகம்-கழிமுள்ளி. எம்தோள்
என்றது தலைவியின் தோளைக்கருதி; இவ்விதம் தோழி கூறுதல்
பொருந்தும்; தொல். பொருள். 27. துறந்தனனாயின்-நீங்கினனாயின்
எவன்கொல்-யாது? நயந்த-விரும்பிய. தோள்-பிற மகளிரது தோள்.
தோள் எவன் கொல்.

  (மேற்.) மு. ?இதனுள் ‘கழிய முண்டக மலரும்? என முள்ளு
டையதனைப் பூ மலருமென்று உள்ளுறுத்ததனான் இருவர் காமத்
துறைக் கண்ணும் ஒருதலை இன்னா ஒருதலை இனிது என்றா
ளென்பது. ‘என்றோடுறந்தனன்? என்பது முள்ளுடைமையோ
டொக்க, ‘என்னாங்கொல் லவ னயந்தோடொள்? என்ற வழி அவன்
அன்பிற் றிரியாமை கூறினமையின் முண்டக மலர்ச்சியோ
டொப்பிக்கப்படும்? (தொல். உவம. 29, பேர்.), ‘அறத்தோடு நின்ற
பின் வரைவு நீட மற்றொரு குலமகளை வரையுங்கொலென்று ஐயுற்ற
செவிலி குறிப்பறிந்த தோழி அவட்குக் கூறியது? (தொல். களவு.
23, ந.).

 (பி-ம்.) 1 ‘என்றோ டுறந்தன? 2 ‘என்னாங்கொல்லவன்?, ‘என்
னாங் கொன் மற்றவதோ டோனே.       ( 8 )