109

2. நெய்தல் (11)
தாய்க்குரைத்த பத்து


109. அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்
   நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
   எந்தோ டுறந்த காலை யெவன்கொல்
   பன்னாள் வருமவ னளித்த பொழுதே.

  எ-து அறத்தொடு நின்றபின்பு வரைவான் பிரிந்த தலைமகன்
கடிதின் வாராதவழி ஐயுற்ற செவிலி, ‘அவன் நும்மை துறந்தான்,
போலும் ; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?? என்றாட்குத் தோழி
சொல்லியது.

 குறிப்பு. தூம்பின் பூ-உட்டுளையையுடைய பூ. பன்னாள் எவன்
கொல், அளித்தபொழுதே வரும்.

 (மேற்.) அறத்தொடு நின்றபின் வரைவான்பிரிந்து நீட்டித்துழி
ஐயுற்ற செவிலி ‘அவன் நும்மைத் துறந்தான் போலும், நுங்கட்கு
அவன் கூறிய திறம் யாது?? என்றாட்குத் தோழி கூறியது (தொல்.
களவு. 23, ந.)        ( 9 )