எ-து நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்
தொடு நின்றது.
குறிப்பு. என் ஐ-என் தலைவன் ; ஐங். 201 : 1, 312 : 4; குறுந்
24 : 2, குறள், 771, என்றும்-என்போம். ஆங்கும்-அவ்விதமும்.
பால்-ஊழ். பால் ஆங்கும் ஆக்குமோ? வாழிய; வாழிய : வெறுப்புக்
குறிப்பு வாழிய பாலே : குறுந். 229 : 5.
நொதுமலர் வரைவின்கண்-அயலார் வரைவுக்குரிய முயற்சி
யோடு வந்த காலத்தில்.
(மேற்) மு. வேற்றுவரைவு வரின் அது மாற்றுதற்குத் தலைவி
கூறல் (தொல். களவு. இளம்.). இறந்துபாடு பயக்குமாற்றால் தன்
திறத்து அயலார் வரையக் கருதிய ஞான்று அதனை மாற்றுதற்குத்
தலைவி கூற்று நிகழும் (தொல். களவு. 20, ந.) ( 10 )
(11) தாய்க்குரைத்த பத்து முற்றிற்று.