131


(14) பாணற்குரைத்த பத்து


131. நன்றே பாண கொண்கனது நட்பே
   தில்லை வேலி யிவ்வூர்க்
   கல்லென் கௌவை யெழாஅக் காலே.

  எ-து வாயில் வேண்டி வந்த பாணன் தலைமகன் காதன்மை
கூறினானாகத் தலைமகள் 1வாயில்மறுப்பாள் அவற்குக் கூறியது.

  குறிப்பு. தில்லை-ஒருவகை மரம்; கலித். 133 : 1; திணைமாலை.
61. கௌவை-பழிச்சொல். கல்லென் கௌவை: குறுந். 24 : 6,
262 : 1. எழாஅக்கால் நட்பு நன்று.

  (பி-ம்) 1 ‘வாயில் மறுப்பாள் கூறியது? ( 1 )