(14) பாணற்குரைத்த பத்து
132. அம்ம வாழி பாண புன்னை அரும்புமலி கான லிவ்வூர் அலரா கின்றவ ரருளு மாறே.
எ-து வாயில் வேண்டிவந்த பாணன், நீர் கொடுமை கூற வேண்டா; நும்மேல் அருளுடையர் என்றாற்குத் தலைமகள் சொல்லியது.
குறிப்பு. அரும்பு-மொட்டு. அவர் அருளுமாறு அலராகின்று. அலராகின்று-அலர் எழலாயிற்று; குறுந். 258 : 2; அகநா. 96 : 18. ( 2 )