எ-து பிரிவின்கண் தலைமகள் கவின் தொலைவு கண்டு வெறுத்து
ஒழுகுகின்ற பாணற்குத் தலைமகன் வந்துழிக் கவினெய்திய
தலைமகள் சொல்லியது.
குறிப்பு. இருங்கழியையும் பாய்பரியையும் தேரையுமுடைய
கொண்கன், மாமைக்கவின்-மாமையாகிய பேரழகு கொண்கனொடு
மாமைக்கவின் வந்தன்று.
வெறுத்து-தலைமகளை வெறுத்து. (பி-ம்.) 1 ‘பாய்பணி? ( 4 )