135


(14) பாணற்குரைத்த பத்து


135. பைதல மல்லேம் பாண பணைத்தோள்
   ஐதமைந் தகன்ற வல்குல்
   நெய்தலங் கண்ணியை நேர்தனாம் பெறினே.

  எ-து பரத்தையொருத்தியைத் தலைப்பெய்வான்வேண்டி அத
னைத் தலைமகன் மறைத்தொழுகுகின்றதறிந்த தலைமகள் அவன்
கேட்கு மாற்றால் பாணற்குச் சொல்லியது.

  குறிப்பு. பைதலம் அல்லேம்-துன்பமுடையவராகமாட்
டோம். ஐது அமைந்து-மெல்லிதாகப் பொருந்தி, நெய்தலங்
கண்ணி என்றது பரத்தையை, நெய்தற்பூவை உவமித்ததால்
பரத்தையின் இழிவு கூறப்பட்டது; ஐங்.4 : 4, உரை, நேர்தல்-
ஒத்தல், பெறின் பைதல மல்லேம்.         ( 5 )