(14) பாணற்குரைத்த பத்து
138. பண்பிலை மன்ற பாண விவ்வூர் அன்பில கடிய கழறி மென்புலக் கொண்கனைத் தாரா தோயே.
எ-து தலைமகன் வாயில்பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது. குறிப்பு. கடிய-கடுமையான சொற்களை, மென்புலம்-நெய்தல் நிலம். தாராதோய், பண்பிலை மன்ற. ( 8 )