எ-து ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப்
பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது.
குறிப்பு. எம்வயின்-எம்மிடத்தில். மாண் நலம்-மாட்சி
பொருந்திய அழகை. மருட்டும்-கலங்கச் செய்யும். நின்னினும்-
உன்னைக் காட்டிலும். நல்லோர்-மகளிரது. நலம்-அழகை.
நல்லோர் என்றமையின் தலைவனையும் ‘பலமகளிரையுடைய? என
இகழ்ந்தவாறு. இச்செய்யுளில் பாணனை முன்னிலைப்படுத்தல்
இல்லை. ( 9 )