எ-து தலைமகள் வாயில் மறித்துழி ‘இவன் நின்மேல் தொடர்ச்சி
யில் குறைவிலன்; அருளுமுடையன்; ஆதலால், நீ இவனோடு புலத்
தல் தகாது? என நெருங்கி வாயில் நேர்விக்கும் தோழிக்கு அவள்
சொல்லியது.
(ப-ரை.) ‘துறைவன் வரையும்..........அதுவே? என்றது அப்பரத்
தையைத் தனக்கு இற்பரத்தையாக வரைவானென்று கூறா நின்றா
ராதலின், நீ கூறுகின்றபடியே, ‘அறமுடையன்போலும், அருளும்
அதுவே? என இகழ்ந்து கூறியவாறு, ‘கையறு பிரற்று கானலம்
புலம்பத் துறைவன்? என்றது பரத்தையிடத்துச் சென்ற வாயில்கள்
கூற்றேயாய்ப் பிறிதுமாற்றமின்றிச் செல்கின்ற துறைவன் எ-று.
குறிப்பு. கையறுபு - செயலற்று. இரற்றும்-ஒலிக்கும்; ஐங்.
114 : 3 புலம்பு-கடற்கரை, அறவன்-புண்ணியமுடையான்; ஐங்.
212 : 3, அருளுமாரதுவே-அருளும் அதுவே; மார் : அசைநிலை.
(பி-ம்.) 1 ‘கையறப் பிரற்றுக்? 2 ‘?கானல் புலம்புந்? ( 2 )