153


(16) வெள்ளாங்குருகுப் பத்து


153. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
   காணிய சென்ற மடநடை நாரை
   உளர வொழிந்த தூவி 1குவவுமணற்
   போர்விற் பெறூஉந் துறைவன் கேண்மை
   நன்னெடுங் கூந்த 2னாடுமோ மற்றே.

 எ-து பரத்தையிற்பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்கு
மாற்றால் வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி கூறியது

 (ப-ரை.) ‘உளரவொழிந்த.......துறைவன்? என்றது இவன்
கூறிவிட்ட வாயில்கள் மாற்றம் பரத்தைபெறும் துறைவன் எ-று.

 குறிப்பு. உளர-வகிர, ஒழிந்த-உடலினின்றும் நீங்கிய, நாரை
யினது தூவி; ஐங். 156:3. மணற்போர்வு-மணற்குவியல்.
பெறூஉம்-பெறுகின்ற, துறைவனது கேண்மையை. நன்னெடுங்
கூந்தல் என்றது தலைவியை, நாடுமோ : நாடாள் என்றபடி.

    (பி-ம்.) 1 ‘குலவுமணற்? 2 ‘னாணுமோ?.    ( 3 )