154


(16) வெள்ளாங்குருகுப் பத்து


154. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
   காணிய சென்ற மடநடை நாரை
கானற் சேக்குந் துறைவனோ
டியானெவன் செய்கோ பொய்க்குமிவ் வூரே.

  எ-து தோழி வாயில்வேண்டி நெருங்கியவழி வாயில் மறுக்கும்
தலைமகள் சொல்லியது.

  (ப-ரை.) ‘துறைவனோடு யானெவன் செய்கோ’ என்றது.
‘அவனோடு யான் ஒழுகுமொழுக்கம் என்?’ என்று வெறுத்துக்
கூறியவாறு. ‘பொய்க்குமிவ்வூர்’ என்றது தலைமகன் குணங்கூறு
கின்ற தோழியை நோக்கியெனக் கொள்க. ‘நாரை கானற்சேக்கும்’
என்றது வாயிலாய்ச் சென்றார் அவண்மாட்டுத் தங்குதல் நோக்கி
யெனக்கொள்க.

   குறிப்பு. கானற்சேக்கும்-கானலில் தங்கும். யான் எவன்
செய்கு-நான் என்ன செய்வேன்; என்றது வெறுப்புக் குறிப்பு; ஓ :
அசைநிலை : குறுந். 25 : 2, 96 : 2. பொய்க்கும் என்றது தோழி
தலைவனது குணம் கூறுதலை.     ( 4 )