எ-து பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய் அஃது இடமாக
வந்தமை அறிந்ததோழி தலைமகற்கு வாயில் மறுத்தது.
(ப-ரை.) ‘கண்டிகுமம்மாமேனி யெந்தோழியது துயரே’ என்றது
எம்மிடத்துத் துயரமில்லை; எந்தோழியாகிய பரத்தைத் தலைவி
துயரங்கண்டேம்; நீ கடிதிற்சென்று அவள் வருத்தம் தீர்ப்பாயாக
எ-று. ‘நாரை ,,,,,,,,,,,, கொட்கும்’ என்றது நினக்கு வாயிலாகச்
சென்றார் அவள் கருத்தறிந்து மகிழ்ந்து ஒழுகுகின்றாரென்பதாம்’,
குறிப்பு. பெருந்துறைக் கண்ணே. துணையொடு-பெடை
நாரையொடு. கொட்கும் சுழன்று அலைகின்ற. கண்டிகும்-கண்
டோம். எம் தோழி என்றது பரத்தையை. எம் தோழியது துயரைக்
கண்டிகும்.
(மேற்.) அடி, 4, தண்ணந் துறைவனென்பது விரிக்கும் வழி
விரித்தல் (தொல். எச்ச, 7 இளம், சே.)
(பி-ம்.) 1 ‘மேனியென் றோழியது’. ( 8 )