159


(16) வெள்ளாங்குருகுப் பத்து


159. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
    காணிய சென்ற மடநடை நாரை
    பசிதின வல்கும் பனிநீர்ச் சேர்ப்ப
    நின்னொன் றிரக்குவெ னல்லேன்
    தந்தனை சென்மோ கொண்டவிவ ணலனே.

 எ-து மறாமற்பொருட்டு உண்டிக்காலத்து வாயில் வேண்டி
வந்த தலைமகற்குத் தோழிகூறியது.

 (ப-ரை.) நீ கொண்ட இவள் நலன் தந்தனை செல்லெனக்
கூட்டுக. ‘நாரை.............சேர்ப்ப? என்றது வாயிலாய் நின்பரத்தை
மனைக்கட் சென்றோர் நின்னைப் பார்த்திருந்து பசிப்பர்கள்; அவ
ருடன் அருந்தக் கடிதின் அவள் மனைக்கண் செல்வாயென்பதாம்.

  குறிப்பு. பசி தின-பசி அறிவை வருத்த; ஐங். 305 : 2 அல்கும்-
தங்கும். இரக்குவென் அல்லேன்-இரப்பேனில்லை. தந்தனை
சென்மோ-தந்து செல்வாயாக. இவள் நலனே-இத்தலைவியது
அழகை. நீ கொண்ட இவள் நலனைத் தந்தனை சென்மோ என
இரக்குவெனெல்லேன், நலத்தைத் தாவென்றல் : நற். 395 : 9-10;
குறுந். 236 : 2-6; கலித். 128 : 10-11. அகநா. 376 : 18; ஐந். எழு.
64, 66.

  உண்டிக் காலத்து மறாமற்பொருட்டு விருந்துடன்
வந்தமையால்.    ( 9 )