160


(17) சிறுவெண்காக்கைப் பத்து


160. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
    காணிய சென்ற மடநடை நாரை
    நொந்ததன் றலையு நோய்மிகுந் துறைவ
    பண்டையின் மிகப்பெரி தினைஇ
    முயங்குமதி பெரும மயங்கினள் பெரிதே.

  எ-து 1புலந்த காதற்பரத்தை புலவி தீராது தலைமகன் வாயில்
வேண்டிவந்தானென்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது.

 (ப-ரை.) ‘பண்டையின்? என்றது பண்டும் நீ புலவிதீர்த்து
முயங்கும். இயல்புடையை எ-று. ‘நாரை........துறைவ? என்றது நின்
ஆற்றாமைகை்குப் பரிந்து வாயிலாய்ச் சென்றவர்கள் அவள் வருத்தங்
கண்டு மிகவும் வருந்துகின்றார்களென்பதாம்.

   குறிப்பு. நொந்ததன் தலையும்-நொந்ததன் மேலும். பண்டை
யின்-முன்னினும். இனைஇ-வருந்தி, முயங்குமதி-முயங்குவாயாக.
பெரிது மயங்கினள், பண்டையின் இனைஇ முயங்குமதி.

  (பி-ம்.) 1 ‘புலர்ந்த? ( 10 )

(16) வெள்ளாங்குருகுப்பத்து முற்றிற்று.