எ-து ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலை
மகள் ஆற்றாளாய்ச் சொல்லியது.
(ப-ரை.) ‘சி.றுவெண்காக்கை............தங்கும்’ என்றது வரைதற்கு
வேண்டுவன முயலாது தன்மனைக்கண்ணே தங்குவான் எ-று.
குறிப்பு. கரையது-கரையிலுள்ளதான. சிறுவெண்காக்கை :
நற். 31 : 2; குறுந். 334 : 1. குறுந் 246 : 1, 313 : 1, கருங்கோட்டுப்
புன்னை-கரிய கிளைகளையுடைய புன்னை மரம் ; நற். 67 : 5 ; குறுந்.
123 : 3, பயந்து-பசந்து நுதலழிய-நெற்றியினது அழகுஅழிய.
சாஅய்-மெலிந்து. நயந்த-விரும்பிய; நோய்ப்பாலஃது-நோயின்
பகுதியது. (பி-ம்.) 1 ‘பசந்து’ (1)