(ப-ரை.) ‘துறைவன் சொல்லோ பிறவாயின’ என்றது, ‘இன்ன
நாளுள் வரைவல்’ என்ற சொற்கள் வேறாயின எ-று ‘சிறுவெண்
காக்கை............. சேக்கும்’ என்றது வரைவிற்கு வேண்டுவன முயலாது
தன் கருமஞ்செய்து மனைக்கண்ணே தங்குவான் எ-று.
குறிப்பு. நீத்துநீர்-நீஞ்சத்தக்க நீர்; மிக்க ஆழமானது என்ற
படி. இருங்கழி-பெரிய உப்பங்கழியில். பொதும்பர்-சோலையில்,
சேக்கும்-தங்கும். பிறவாயின-அவன் கூறியதற்கு மாறுபாடாயின.
அடி, 4; குறுந். 316-8. (பி-ம்.) 1 ‘றிரையது’ ( 2 )