எ-து தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகியவழித் தலை
மகள் தோழிக்குச் சொல்லியது.
(ப-ரை.) ‘சிறுவெண்காக்கை, இருங்கழி மருங்கின் அயிரை
ஆரும்? என்றது பரத்தையருள்ளும் புல்லியாரை விரும்புவான் எ-று.
‘துறைவன் தகுதி, நம்மோடமையாது அலர்பயந்தன்றே? என்றது
அவன் தகுதியுடைமை நமக்குத் தீங்கு செய்தலேயன்றித் தனக்கும்
அலர்பயந்ததென்பதாம்.
குறிப்பு. அயிரை-ஒருவகையான தாழ்ந்த மீன்; பதிற். 29 : 4.
ஆரும்-உண்ணும். துறைவன் தகுதி-துறைவனது தகுதியுடைமை.
அமையாது-தங்காமல். அலர் பயந்தன்று-தலைவனுக்கும் அலரை
அளித்தது; என்றது புறத்தொழுக்கத்தால். (பி-ம்.) 1 ‘இருங்கரை? ( 4 )