எ-து பரத்தையிற்பிரிந்த தலைமகன்விட வாயிலாய்வந்தார்க்கு
அவன் கொடுமைகூறித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள்
சொல்லியது.
(ப-ரை.) ‘தொல்கேளன்? என்றது நமக்குப் பண்டு கேளாகிய
தன்மையினையுடையான் எ-று. ‘சிறுவெண்காக்கை............ ஆருந்
துறைவன்? என்றது பரத்தையர் பலரையும் தனக்குவரும் வருத்தம்
அறியாது நுகர்வானென்பதாம்.
குறிப்பு. இனக்கெடிறு ஆரும்-கூட்டமான கெடிற்றுமீனை
உண்ணும். கெடிறு முள்ளுள்ள மீனாதலின் அதனை உண்டல்
பரத்தையரை நுகர்தற்கு உவமை கூறப்பட்டது. நல்குவன்-அளிப்
பவன். தலைவன் நல்குதல்; குறுந். 37 :1, 60 : 5; குறள், 1156.
நல்கானாயினும்-அளி செய்யாவிடினும். தொல்கேளன்-நமக்குப்
பண்டு கேளாகிய தன்மையயுடையான்.
தனக்கு வரும் வருத்தமென்றது தலைவியரைப் புணர்ந்து
விடுதலை. ( 7 )