168


(17) சிறுவெண்காக்கைப் பத்து


168. பெருங்கடற் 1கரையது சிறுவெண் காக்கை
    துறைபடி யம்பி 2யகமணை யீனும்
    தண்ணந் துறைவ னல்கின்
    ஒண்ணுத லரிவை 3பாலா ரும்மே.

 எ-து நொதுமலர் விரைவுவேண்டி விடுத்தமையறிந்த தலை
மகள் ஆற்றாளாய்ப் பசியடநிற்புழி, ‘இதற்குக் காரணமென்?? என்று
செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது.

  (ப-ரை.) ?துறைபடி யம்பி யகமணை யீனும்? என்றது யாவர்க்
கும் எவ்விடத்தும் தீங்குவாராத துறைவனென அவன் சிறப்புக்
கூறியவாறு.

  குறிப்பு. அம்பி-ஓடத்தினது. அகமணை-உட்கட்டைக்குள்.
ஈனும்-முட்டையிடும். நல்கின்-தலையளி செய்யின். அரிவை-
தலைவி. பால்ஆரும்-பாலை அருந்துவள். பால் ஆர்தல் : அகநா.
48 : 2.

  நொதுமலர்-அயலார், பசியடநிற்றல்-பசி வருத்தவும் உண்ணா
திருத்தல்; இது புணர்ச்சி நிமித்தமான மெய்ப்பாடுகளுள் ஒன்று;
தொல். மெய்ப். 22.

   (மேற்.) மு. நொதுமலர் வரைவுழி ஆற்றாது பசியட நின்றுழி
இதற்குக் காரணமென்னென்ற செவிலிக்குத் தோழி கூறியது (தொல்.
களவு. 23. ந,) (பி-ம்.) 1 ‘றிரையது? 2 ‘யகமனை? 3 ‘பாலார்கம்மே?  ( 8 )