எ-து காதற்பரத்தையை விட்டு மற்றொருத்தியுடன் ஒழுகா
நின்ற தலைமகன் வாயில்வேண்டி விடுத்துழி வாயினேர்தல்வேண்டி
நின்கண் பசந்தனகாணென்று முகம்புகு தோழிக்குத் தலைமகள்
சொல்லியது.
(ப-ரை.) சிறுவெண்காக்கை ஞாழலை வெறுப்பின் புன்னைச்சினை
யிற் சேக்குமென்றது பரத்தையர் மனையில் ஒன்று வெறுப்பின்,
ஒன்றின்கண் தங்குதலையுடையானென்பதாம்.
குறிப்பு. பொன்னிணர் ஞாழல்-பொன்னிறமான பூங்கொத்துக்
களையுடைய ஞாழல். முனையின்-வெறுப்பின்; குறுந். 296 : 3. பூஞ்
சினை-பூக்களையுடைய கிளையில், நெஞ்சத்துண்மை-நெஞ்சத்தி
லுள்ளதை. அறிந்தும் என் கண் என்செயப் பசக்கும்; கண்பசத்தல் :
ஐங். 170 : 4; குறுந். 13 : 5.
(பி-ம்.) 1 ‘முனையிற்’ 2 ‘பூஞ்சினை வதியுந்’ ( 9 )