எ-து பரத்தையிடத்து வாயில்விட்டு ஒழுகுகின்ற
3தலைமகனது வாயிலாய் வந்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது.
(ப-ரை.) ‘எனக்கோ காதலன் அனைக்கோ வேறே? என்றது,
‘இவள்மேல் அவன் காதலன்? என்று நீயிர் கூறுகின்ற மாற்றம்
மெய்யென்பது எனக்குமொக்கும்; இவள் மனத்திற்கு ஒவ்வா
தென்பதாம். அன்னையென்றது தலைமகளை. ‘செம்மறுத் தூவி
தெண்கழிப் பரக்கும் துறைவன்? என்றது அப்பரத்தைக்குக் கூறி
விட்ட மாற்றம் எவ்விடத்தும் பரந்து செல்கின்ற துறைவன் எ-று.
குறிப்பு. ஒழித்த-நீங்கிய. செம்மறுத்தூவி-செந்நிறத்தை
யுடைய தூவி; ?கவிரிதழன்ன தூவி? (குறுந். 103 : 2); கலித்.
126 : 1-5, ந. ஐங். எழு. 68. தெண்கழிந் பரக்கும்-தெளிந்த கழியில்
பரக்கின்ற எனக்கு என்றது தோழியை. காதலன்-தலைவியினிடத்து
அன்பையுடையவன். அனைக்கோ வேறு-தலைவிக்கோவெனில்
காதலனில்லை; தலைவி அவனை அன்புடையனாகக் கருதவில்லை
யென்றபடி.
(பி-ம்.) 1 ‘பரிக்குந்? 2 ‘தலைமகற்கு? ( 6 )