183


(19) நெய்தற் பத்து


183. கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன்
   குறும்பொறை நாட னல்வய லூரன்
   தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
   கடும்பகல் 1வருதி கையறு மாலை
   கொடுங்கழி நெய்தலுங் கூம்பக்
   காலை வரினுங் களைஞரோ விலரே.

 எ-து வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள்
மாலைக்குச் சொல்லியது.

  (ப-ரை.) ‘பண்டையிற் கடும்பகல் வருதி? என்றது பண்டு வரும்
காலத்திலே வந்தாற்போலப் பிறர்க்குத் தோன்ற கடும்பகற்கண்ணே
வாரா நின்றாய் எ-று.

   குறிப்பு. இச் செய்யுளின் முதலிரண்டடிகள் சில பிரதிகளில்
காணப்படவில்லை. கணங்கொள். அருவி-திரட்சியையுடைய நீர்
வீழ்ச்சி. கான்-காடு. நாடன்-குறிஞ்சிநிலத் தலைவன்; குறுந். 3 : 4;
‘குறிஞ்சிநில முடைமையால் நாடனென்று சொல்வேனோ (புறநா.
49 : 1, உரை). குறும்பொறை-குறிய பொற்றைகள். பிரிந்தென-பிரிந்
தானாக; குறுந். 5 : 4. ‘கணக்கொள்............ சேர்ப்பன்? என்றது
தலைவன் நான்கு நிலத்துக்கும் உரியன் என்றபடி. கடும்பகல்-விளக்
கத்தையுடைய பகல். கடும்பகல் வருதியென்றது பகலும் மாலையின்
துன்பத்தைச் செய்ததுபற்றி; குறுந். 234 : 5-6. கையறுமாலை-பிரித்
தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப்பொழுதே; விளி; குறுந்.
32 : 1, 387 : 2. களைஞர்-விலக்குவோர். மாலை, சேர்ப்பன் பிரிந்
தெனக் கடும்பகல் வருதி, காலை வரினும் களைஞர் இலர்.

  (மேற்.) மு. இடம் நியமித்துக் கூறுதல் செய்யுள் வழக்கு (தொல்.
அகத். 3, ந.). பருவ வரவின்கண் மாலைப்பொழுது கண்டு ஆற்றா
ளாய தலைவி தோழிக்குக் கூறியது ; நெய்தற்கண் மாலை வந்தது
(தொல். அகத். 12, ந.). இருந்தலென்னும் உரிப்பொருள் வந்த
நெய்தற்பாட்டு (நம்பி. ஒழிபு. 42)

   (பி-ம்.) 1 ‘வருந்திக் கையறு மாறு, மாலை நெய்தலுங் கூம்பக்? ( 3 )