184


(19) நெய்தற் பத்து


184. நெய்த 1லிருங்கழி நெய்த னீக்கி
   மீனுண் 2குருகிளங் கான லல்கும்
   கடலணிந் தன்றவ ரூரே
   கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே.

  எ-து வாயில்வேண்டி வந்தார் தலைமகன் அன்புடைமை
கூறியவழி வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது
  (ப-ரை.) நெய்தல் நீக்கி மீனுண்குருகு இளங்கானலில் அல்கு
மென்றது பொதுமகளிரிடத்து ஊடல் நீக்கி இன்பநுகர்ந்து ஆண்டுத்
தங்குவானென்பதாம்.
குறிப்பு. நெய்தல் நீக்கி-நெய்தல் மலரை நீக்கி. அல்கும்-தங்
கும். கடலணிந்தன்று-கடலையுடையது, அவரூர் கடலணிந்தன்று,
அவருடைய நட்பு கடலினும் பெரிது; நற் 166 : 10; குறுந். 3 : 2.
  (பி-ம்.) 1 ‘லிகுங்கழி’ ‘குறுகினங்’    ( 4 )