எ-து பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகளைத் தோழி
செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயது.
(ப-ரை.) நாரையினங்கடுப்ப மகளிர் நீர்வார் கூந்தலை உளருந்
துறைவ என்றது தம்மிடத்துககுற்றம் நீக்கும் மகளிரையுடைய
துறைவ எ-று.
குறிப்பு. நாரை நல்லினம் கடுப்ப-நாரையின் கூட்டத்தைப்
போல மகளிர்-முதிய மகளிர். உளரும்-விரித்து வருகின்ற; புறநா.
260 : 4, உறைப்ப-துளிப்ப நெய்தல் உறைப்ப வரும் தேர் செல்
லாதீ-போக வேண்டா; குறுந். 390 : 2. துறைவ. தேர். வருமென (க்
கேட்ட) யாய் செல்லாதீமோ என்றனள் : தலைவன் தேர் வந்த
தெனக் கேட்ட அன்னை அலைத்தல்; குறுந். 246 : 3-5; அகநா.
20 : 12-6.
(மேற்,) மு. தோழி தாயறிவு உணர்த்தல் (நம்பி. களவு. 50)
(பி-ம்.) 1 ‘சொல்லாதீமோ? ( 6 )