187


(19) நெய்தற் பத்து


187. நொதும லாளர் கொள்ளாரிவையே
   எம்மொடு 1வந்து கடலாடு 2மகளிரும்
   நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
   உடலகங் கொள்வோரின்மையின்
   தொடலைக் குற்ற சிலபூ வினரே.

  எ-து தோழி கையுறை மறுத்தது.
  (ப-ரை.) ‘நொதுமலாளர் கொள்ளாரிவையே? என்றது நீயல்லா
தாரில் இப்பூப்பறிப்பாரில்லை எ-று. எம்மொடு வந்து கடலாடுமகளி
ரும் இந்நெய்தல் தழையாற் பாவைபுனையார் : தொடலை தொடுப்
பாரும் இதனிற் சிலபூக்கொள்வதல்லது இப்பூத்தன்னையே தொடலை
யாகப் புனைவாரில்லை எ-று.

  குறிப்பு, நொதுமலாளர்-அயலார், இவை என்றது நெய்தல்
தழைகளை இவை கொள்ளார், பகைத்தழை-ஒன்றற்கொன்று மாறா
கியதழைகளால்; ஐங். 211 : 3; நற். 8 : 2; குறுந். 293 : 5. புனையார்;
செய்யார் உடலகம்-முற்றும். தொடலை-மாலைக்காக. குற்ற-பறித்த.
  (மேற்.) மு. தோழி கையுறை மறுத்தது (தொல். களவு. 23, ந.).
நம்பி. களவு. 28.
  (பி-ம்.) 1 ‘வந்த?, ‘கலந்த4 2 ‘மகளிர்? ( 7 )