188

(19) நெய்தற் பத்து


188. இருங்கழிச் சேயிறா வினப்புள் ளாரும்
   கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
   1வைகறை மலரு நெய்தல் போலத்
   தகைபெரி துடைய காதலி கண்ணே.

  எ-து விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன் தலைவி இல்வாழ்க்
கைச் சிறப்புக்கண்டு மகிழ்ந்து சொல்லியது.
  (ப-ரை.) விடியற் காலை மலரும் நெய்தலைக் கண்ணிற்கு
உவமையாகக் கூறிற்று, வந்தபொழுதே மலர்ந்த சிறப்பு நோக்கி
யெனக் கொள்க. ‘இருங்கழிச் சேயிறா இனப்புள் ளாரும்? என்றது
விருந்தினர் நுகர்ச்சி கூறியவாறெனக் கொள்க.

  குறிப்பு. சேயிறா-சிவந்த இறாமீன்களை; ஐங். 196 : 3, இனப்புள்
பறவைக் கூட்டம். ஆரும்-உண்ணும், கொற்கைக் கோமான்-
பாண்டியன். வைகறை-விடியற்காலத்தில், தகை-பெருமை, காதலி
என்றது தலைவியை. காதலியின் கண்கள் நெய்தல் போலத் தகை
பெரிதுடையன, வைகறையில் நெய்தல் மலர்தல் : முருகு. 73-4.

   (பி-ம்.) 1 ‘வைகறை வரு நெய்தல்?   ( 8 )