எ-து ‘நின்னாற் காணப்பட்டவள் எவ்விடத்து எத்தன்
மையள்?? என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது.
குறிப்பு. கோடு செறிந்த வளை-சங்கையறுத்துச் செய்யப்பட்ட
நெருங்கிய வளைகள்; ஐங். 185 : 3. 196; 1, கழிப்பூ-கழியிலுள்ள
பூ. இரும்பல் கூந்தல்-கரிய பலவாகிய கூந்தல். கவின்-அழகு,
வரையரமகளிரின்-மலையில் வாழும் தெய்வ மங்கையரினும்.
அரியள்-அடைதற்கு எளியளல்லள். அடி, 4 : அகநா. 162 : 25.
நிறை அரு நெஞ்சம்-நிறுத்தல் அரிய என் உள்ளத்தை. ஒளித்
தோள், தழையள், அரியள்.
(பி-ம்.) 1 ‘மயிர்வார்? 2 ‘கொண்டொழித்தோளே? ( 1 )