192

(20). வளைப் பத்து


192. கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழங்கப்
   பாடிமிழ் பனித்துறை யோடுகல முகைக்கும்
   துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
   வீங்கின மாதோ தோழியென் வளையே.

  (எ-து.) வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி
முனிந்து கூறுவாள்போலத் தன்மெலிவு நீங்கினமை தோழிக்குச்
சொல்லியது.

  (ப-ரை.) ‘கோடுபுலம் கொட்பக் கடலெழுந்து முழங்கப் பாடு
இமிழ் பனித்துறை ஓடுகலமுகைக்கும்’ என்றது நொதுமலர் அகல
நம் சுற்றத்தார் மகிழ அலர்கூறும் அயலார்சிதைய அவர்தேர்
வந்ததென்பதாம்.

  குறிப்பு. கோடு-சங்கினங்கள்; ஐங். 194 : 1, 196 : 1. புலம்-
கரையிடத்திலே. கொட்ப-சுழல. கலம் உகைக்கும்-மரக்கலத்தைச்
செலுத்தும். பிரிந்தென-பிரிய. தோழி, துறைவன் பிரிந்தென
நெகிழ்ந்தன என்வளை வீங்கின.