எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் தலைமகட்கு வளை
கொண்டுவந்து கொடுத்துழி, ‘2பண்டை வளை போலாவாய் மெலித்
துழி நீங்கா நலனுடையவோ இவை? எனத் தலைமகள் மெலிவு
சொல்லித் தோழி வரைவு கடாயது
(ப-ரை.) முத்தம் இருள் நீங்க இமைக்கும் துறைவனாதலின்,
இவட்கு வருகின்ற தீங்கைக் கடிதின் நீக்கி வரைந்துகொள்ள
வேண்டுமென்பதாம்.
குறிப்பு. வலம்புரி-வலப்புறமாக வளைவையுடைய சங்கு.
கரையின்கண். முத்தம்-முத்துக்கள். இருள்கெட-இருள்நீங்க.
இமைக்கும்-ஒளிவிடுகின்ற. அறைபுனல் வால்வளை-கடலிலுள்ள
வெண்மையான சங்கால் இயன்ற வளைகள், நல்லவோ-நல்ல
வைகளோ : மெலிந்துழி நீங்கா நலனடையவோ என்றபடி.
(பி-ம்.) 1 ‘கொண்கனீ? 2 ‘பண்டையிவள் வளை? 3 ‘வேணும்? ( 3 )