எ-து வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிந்த தலைமகன்
தனித்து உறைய ஆற்றானாய்ச் சொல்லியது.
(ப-ரை.) பெறுதற்கரிய முத்தைப் பரதவர் விற்கும் கடல்கெழு
கொண்கனென்றது அவர்கள் தாராதாரல்லர்; யாம் அவர்களுக்கு
வேண்டுவன கொடுத்துக் கொள்ளமாட்டாது வருந்துகின்றே
மென்பதாம்.
குறிப்பு. வளை-சங்கு, வளைபடு முத்தம் : திருச்சிற். 85, பகரும்-
விற்கும். கெடலரும்-நீக்குதற்கரிய. படல் இன் பாயல்-கண்படுதற்ரிய
இனிய தூக்கத்தை. பாயல்-தூக்கம் ; பதிற். 19 : 12; 68 : 15.
வௌவியோள்-அபகரித்தவள். பாயலை வௌவுதல் : ஐங்.
176, குறிப்பு.
(மேற்.) மு. வரைவிடைவைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு
வருந்தியது (தொல். அகத். 45, ந.) ; நம்பி. களவு. 54.
(பி-ம்.) 1 ‘வறுவி?, ‘வவ்வி? ( 5 )