199

(20). வளைப் பத்து


199. கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
   வானுயர் 1நெடுமண லேறி யானாது
   காண்கம் வம்மோ தோழி
   செறிவளை நெகிழ்த்தோ னெறிகட னாடே.

 எ-து தலைமகன் ஒருவழித் தணந்துழி ஆற்றாளாகிய தலைமகளை
ஆற்றுவிக்கும் தோழி சொல்லியது.

  குறிப்பு. கலிதிரை-ஒலிக்கின்ற அலை. திளைக்கும்-இடைவிடாது
நெருங்கும். மணலேறி-மணற்குன்றிலேறி. காண்கம் வம்மோ-காண்
போம் வருவாயாக. தோழி என்றது தலைவியை; விளி : தோழி
நாடு காண்கம் வம்மோ.

  (மேற்) மு. தலைவியை ஆற்றுவித்தது (தொல். களவு. 24,
இளம்.) ; நம்பி. களவு. 52. (பி-ம்) 1 ‘நெடுவரை யேறி’   ( 9 )