எ-து உடன்போக்குத் துணிந்தவழி அதற்கு இரவின்கண்
தலைமகன் வந்ததறிந்த தோழி தலைமகளைப் பாயலுணர்த்திச் சொல்
லியது.
குறிப்பு. எல்வளை; விளி. ஆய் நுதல்கவின-மெலிந்த நெற்றி
பசலை நீங்கி அழகு பெற. கண்ஞெகிழ்மதி என்றது துயிலுணர்த்
தியபடி. நலம்-அழகை. நகுகம்-இகழ்ந்து சிரிப்போம். எல்வளை,
கொண்கன் வந்தனன்; பசலையை நகுகம், கண் ஞெகிழ்மதி.
(மேற்.) மு. இதில் அனந்தல் தீர என்றதனானே உடன்கொண்டு
போதற்கு வந்தானனெனப் பாயலுணர்த்தியது (தொல். அகத். 39, ந.)
(பி-ம்.) 1 ‘கவின்பெறப்? 2 ‘கொண்கனும்? 3 ‘நெடுங்கண்ண
னந்த றீர்மதி? 4 ‘நலங்கிளர்? 5 ‘நகுகம்யாமே?. ( 10 )
(20) வளைப்பத்து முற்றிற்று.
நெய்தல் முற்றிற்று.
அம்மூவனார்