எ-து பரத்தையருள்ளும் ஒருத்தியைவிட்டு ஒருத்தியைப் பற்றி
ஒழுகுகின்றா னென்பது கேட்ட தோழி வாயிலாய் வந்தார் கேட்பத்
தலை மகட்குச் சொல்லியது.
(ப-ரை.) ‘தாய்சாப் பிறக்கும்........... அவனூர்? என்றது தொன்
னலம் சாம் வண்ணம் பிறக்கும் பொய்யுடனே செய்தன சிதையத்
தோன்றும் அருளின்மையையும் உடையான் எ-று.
குறிப்பு. தாய் சாப்பிறக்கும்-தாய் சாவப் பிறக்கின்ற. நண்டு
தன் தாய் சாவப் பிறத்தல்: ?கூற்றமா நெண்டிற்குத் தன் பார்ப்பு?
(சிறுபஞ்ச. 11); ?நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்திற்,
கொண்ட கருவழிக்கும்? (நல்வழி); ?புத்தன்றாய் நண்டிப்பி வாழை
புனமூங்கில், கத்தும் விரியன்கடுஞ்சிலந்தி-இத்தனையும், வேலாலும்
வாளாலு மன்றியே தாங்கொண்ட, சூலாலே தம்முயிர்க்குச் சோர்வு?
(நீல. குண்டலகேசிவாதச். 41. மேற்.). பிள்ளை-இங்கே முதலையின்
பார்ப்பு. முதலைத்து-முதலையையுடையது. முதலை தன் பிள்ளையைத்
தின்னுதல்: ?தன் பார்ப்புத் தின்னு மன்பின் முதலை? (ஐங். 41:1).
ஆகின்றுகொல்-ஆகின்றமைதானோ. மகிழ்நன் என்பது மருதநிலத்
தலைவன் பெயர். பொலந்தொடி தெளிர்ப்ப-பொன்னாலாகிய வளை
ஒலிக்க; ?இலங்குவளை தெளிர்ப்ப? (ஐங். 197:1); ?பொலங் கலந்
தெளிர்ப்ப? (பதிற். 18:3). முயங்கியவர்-கலந்த மகளிர். நலம்-அழகு.
துறப்பது-நீங்குதல்.
தொன்னலம்-பழைய அழகு.
(மேற்.) அடி, 1-2, ‘தலைமகள் கொடுமை கூறினமையின் உள்
ளுறை யுவமம் துனியுறுகிளவியாயிற்.று‘, ‘தவழ்பவற்றின் இள
மைக்குப் பிள்ளை யென்னும்பெயர் உரியது? (தொல். உவம. 28, மரபு.
5, பேர்.). ‘தோழி காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றால்
உள்ளுறை உவமம் கூறியது? (தொல். உவம. 31, பேர்.)
(பி-ம்.) 1 ‘தெளிப்ப?, ‘தெழிப்ப? ( 4 )