25
(3) 1களவன் பத்து

 


25. 1புயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்
   வயலைச் செங்கொடி களவ னறுக்கும்
   கழனி யூரன் மார்புபலர்க்
   கிழைநெகிழ் செல்ல லாகு மன்னாய்.

இதுவுமது.

  (ப-ரை.) ‘புயல்புறந்தந்த..............அறுக்கும்? என்றது, எம் புதல்வன்
வருந்துவதும் உணராது நம்மை வருத்துவான் எ-து.

 குறிப்பு. புறந்தந்த-பாதுகாத்த. புனிறு-ஈன்ற அணிமை. தொல்.
உரி. 78. வயலைச்செங்கொடி-வயலையினது செவ்விய கொடியை;
பலர்க்கு-பல மகளிர்க்கு. மார்பு: எழுவாய். இழை நெகிழ் செல்ல
லாகும்-இழை நெகிழ்தற்குக் காரணமான துன்பத்தைச் செய்வ
தாகும்.. 3-4: ?மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்?
(அகநா. 22:3).

 (பி-ம்.) 1 ‘அயல்?                   ( 5 )