எ-து வரைவெதிர் கொள்ளார் தமர் அவண் மறுப்புழித் தோழி
செவிலிக்கு அறத்தொடு நின்றது.
(ப-ரை.) ‘மாரி கடிகொள ........ கடுக? என்றது மாரிநின்ற யாமத்துக்
காவலரைத் தப்பி அவன் தலைவியை எதிர்ப்பட்டமை உணர்த்திய
தெனக் கொள்க. இஃது உண்மைசெப்பலென்னும் அறத்தொடு
நிலை.
குறிப்பு. கடிகொள-மிக. கடுகுதல்-விரைந்து அணுகல். வித்திய
வெண்முளை-விதைத்த வெண்மையான நெல்முளைகளை. மரீஇ-
மருவி. கடிகொள, கடுக, மரீஇ என்க. திதலை-தேமல்; திதலையல்குல்;
ஐங். 72:2; நற். 6:4; குறுந். 27:5. 294:5; அகநா. 54:21.
எதிர்கொள்ளார்-ஏற்றுக்கொள்ளார். உண்மை செப்பல் என்பது
அறத்தொடு நிற்றல் எழுவகையினுள் ஒன்று; தொல். பொருள்.
13 ‘வித்திய........அறுக்கும்? என்றது தலைவன் வரைவைத் தமர் அறியா
மல் விலக்குவர் என்றவாறு.
(பி-ம்.) 1 ‘மார்புற வறீஇ? ( 9 )