212

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


212. 1சாத்த மரத்த பூழி லெழுபுகை
   கூட்டுவிரை கமழு நாடன்
   அறவற் கெவனோ நாமகல் வன்னாய்

 எ-து வரைவெதிர் கொள்ளார் 2தமர் அவண் மறுத்தவழித்
தோழி செவிலிக்கு அறத்தொடு
நின்றது.
  (ப-ரை.) சாந்தமரத்தின் இடைநிலத்து உளவாகிய அகில் சுடு
புகை அச் சந்தனப்பூ நாற்றத்தோடு கமழுநாடனென்றது தனக்கு
வந்த வருத்தம் பாராது தனக்குத் துணையாயினார் நலத்தொடுங்கூடி
எல்லார்க்கும் பயன்பட ஒழுகும் ஒழுக்கத்தை உடையானென்ப
தாம்.

  குறிப்பு. சாத்தமரத்த-சந்தனமரங்களின் இடைவெளி நிலத்
துள்ள; சாத்த : வலித்தல் விகாரம். பூழில்-அகில்; பதிற் 87 : 2.
கூட்டுவிரை கமழும்-கலந்த மணம் போலக் கமழ்கின்ற. அறவன்
என்றது தலைவனை. அகல்வு-நீங்குதல், நாம் அறவற்கு அகல்வு
எவனோ.

  (பி-ம்.) 1 ‘சாந்த? 3 ‘தமர் மறுத்த வழி?    ( 2 )