எ-து தலைமகன், ‘ஒருவழித்தணப்பல்? என்று கூறியவதனை
அவன் சிறைப்புறத்தானகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
(ப-ரை.) பலவின்பழம் பிறர்க்குப் பயன்படாது கல்லளையில்
வீழ்கின்றுழி அவ்விடத்துளதாகிய தேனிறாலினையும் சிதைக்கு
மென்றது தன்னாற் பெற்ற நலம் எங்கள் இயற்கைநலத்தினையும்
சிதைக்கின்ற தென்பதாம்.
இது கேட்டுக் கடிதின் வரைவானாவது பயன்.
குறிப்பு. சாரற்பலவின்-மலைச்சாரலின்கண் உள்ள பலாமரத்
தினது. துணர்-கொத்து. விடரளை-வெடிப்பையுடைய பொந்
தினுள். வீழ்ந்தென-வீழ. பெருந்தேன் இறாள்-மிக்க தேனை
யுடைய கூட்டையும். கீறும்-சிதைக்கும். பேரமர் மழைக்கண்-
பெரிய அமர்த்த குளிர்ச்சியையுடையகண்; நற். 29 : 9; குறுந். 131 :
2; அகநா. 326 : 2, கலிழ-கலங்க
பலவின் பழம் பயன்படாது உகுதல் : ?பலவின், மாச்சினை
துறந்த கோண்முதிர் பெரும்பழம், விடரளை வீழ்ந்தாங்கு?
(நற். 116 : 6-8)
(மேற்) மு. தலைவன் புணர்ச்சி வேண்டாது பிரிவு வேண்டிய
காலத்தில் தலைவிக்குத் தோழி உரைத்தது (தொல். களவு. 24, இளம்.
28, ந.). பாங்கி தலைவிக்குத் தலைவன் செலவுணர்த்தல் (நம்பி.
களவு. 52)
(பி-ம்.) 1 ‘வீழ்ந்தன? 2 ‘னிறாலொடு? ( 4 )