215

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


215. கட்டளை யன்ன மணிநிறத் தும்பி
   இட்டிய குயின்ற துறைவயிற் செலீஇயர்
   தட்டைத் தண்ணுமைப் பின்னரியவர்
   தீங்குழ லாம்பலி னினிய விமிரும்
   புதன்மலர் மாலையும் பிரிவோர்
  அதனினுங் கொடிய செய்குவ ரன்னாய்.

  எ-து இரவுக்குறி நயந்த தலைமகள் பகற்குறிக்கண் வந்து
நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது.

  குறிப்பு. கட்டளை-பொன்னுரைக்கும் கல். மணிநிறத்தும்பி-
கரிய நிறத்தையுடைய தும்பி. பொன்னுரைகல் தும்பிக்கு; ‘நறவின்,
நறுந்தாதாடிய தும்பி பசுங்கேழ்ப், பொன்னுரை கல்லி னன்னிறம்
பெறூஉம், (நற். 25 : 2-4). இட்டிய குயின்ற-சிறியதாகச் செய்யப்
பட்ட. செலீஇயர்-சென்று. தட்டைத் தண்ணுமை-கிளிகடிகருவி
யான மூங்கில்; குறிஞ்சி. 43 ந; நற். 147: 2-8; குறுந். 198 : 3,
இயவர்-வாச்சியக்காரர். தீங்குழல் ஆம்பலின்-இனிமையான குழலி
னது ஆம்பற் பண்ணைப் போல; ஆம்பலந்தீங்குழல் எனமாறி வெண்
கலத்தால் குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறிந்த ஆம்பற்
குழல் எனினும் அமையும்; ?இயவ ரூதும், ஆம்பலங்குழலி னேங்கி
(நற். 123 : 10-11); சிலப். 17 : ?பாம்பு கயிறாக்? தும்பி குழலின்
இமிரும் : கார் : 15; பெருங். 2 : 13 : 24, 3 : 4 : 54. அதினினும்-
அம்மாலைப் பொழுதிற் பிரிதலினும். ‘தும்பி தட்டைத் தண்ணுமைப்
பின்னர்..............இனிய இமிரும்? என்றது இரவுக்குறியை நயந்த நாம்
முதலில் வெறுப்ப அதை மறுத்துப்பின் நாம் மகிழ உடன்படுவார்
என்றவாறு.    ( 5 )