எ-து வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்
திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து
சொல்லியது.
குறிப்பு. வரை-பக்க மலையில், ஆம்-நீர் ; குறுந். 308 : 5; கலித்.
48 : 1. கோடல்-வெண்காந்தட்பூ. நீட-மலர, காதலரைப் பிரிந்
தோர். கையற-செயலற்று வருந்த. தலைவரைப் பிரிந்தோர் பனி
யால் வருந்துதல் : குறுந். 68 : 3. நலியும்-வருத்தும். வடந்தை அச்
சிரம்-வாடையையுடைய முன் பனிக்காலத்துக்கு. அச்சிரம்: சிலப்.
14 : 105. வாடையும் பனியும் : குறுந். 76 : 5-6. முந்து-முன்னே.
காதலோர் வந்தனர்.
(மேற்) மு. வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்திற்கு
முன் வருகின்றமையறிந்த தோழி தலைவிக்குக் கூறியது. (தொல்.
களவு. 23, ந.) (பி-ம்.) 1 ‘அற்சிரம்?, ‘அர்ச்சிரம்? ( 3 )