225

3. குறிஞ்சி

(23) அம்மவாழிப் பத்து


225. அம்ம வாழி தோழி பைஞ்சுனைப்
   பாசடை நிவந்த பனிமலர்க் குவளை
   உள்ளகங் கமழுங் கூந்தன் மெல்லியல்
   1ஏர்திக ழொண்ணுதல் பசத்தல்
   ஓரார் கொன்னங் காத லோரே.

 எ-து மெலிவுகூறி வரைவுகடாவக் கேட்ட தலைமகன் தான்
வரைதற் பொருட்டாய் ஒருவழித்தணந்து நீட்டித்தானாக, ஆற்றா
ளாகிய தலைமகட்குத் தோழி கூறியது.

  குறிப்பு. பசு அடை நிவந்த-பசுமையான இலைக்கு மேலே
உயர்ந்து தோன்றும்; குறுந். 9 : 4. குவளை உள்ளகம் கமழும்
கூந்தல் : குறுந். 270 : 6-8, 300 : 1. மெல்லியல் : தலைவியை நோக்
கிய விளி. ஓரார்-அறியார். நம் காதலோர் நுதல் பசத்தல் ஓரார்
கொல் : நுதல் பசத்தலை அறிவாராதலின் விரைவில் வருவார்
என்றபடி. (பி-ம்.) 1 ‘ஓதியொண்ணுதல்? ( 5 )