எ-து வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து
வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது.
குறிப்பு. சிலம்பு-பக்கமலை. நாறு குலைக்காந்தன்-நறுமணம்
கமழ்கின்ற கொத்தான காந்தட்ட பூவினது. சிலம்பில் நாறும் காந்
தள்; குறுந். 293 : 3; கலித். 59 : 3; நற். 12-3. கொங்குண் வண்
டின்-தேனையுண்ணும் வண்டைப்போல; குறுந். 2 : 1 தலைவனுக்கு
வண்டு : ஐங். 90 : 1-2; கலித். 40 : 24-5 விறற்கவின்-வெற்றி
பொருந்திய அழகை; ஐங். 229 : 4, 230 : 4. அன்பிலாளன்-அன்
பில்லாதவனாகிய தலைவன்.
(மேற்) மு. பாங்கி தலைமகட்குத் தலைமகன் வந்தமை உணர்த்
தல் (நம்பி. களவு. 52). (பி-ம்.) 1 ‘வனப்புடை? ( 6 )