எ-து ஒருவழித்தணந்துவந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத்
தலைமகட்குத் தோழி சொல்லியது.
குறிப்பு. தோளும் நுதலும் இணைத்துக் கூறப்படுதல் : ஐங்.
230 : 3. யாம் ஆற்றலம்-நாம் பொறுக்க மாட்டோம். நப்பிரிந்து-
நம்மைப் பிரிந்து. உறைந்தோர்-தங்கியவர். நீ என்றது தலைவியை.
விட்டனையோ-மறந்து விட்டனையோ. அவர்-தலைவன். நீ அவருற்ற
சூளை விட்டனையோ? அல்லையேல் இப்பொழுதே மறந்துவிடு என்று
தலைவன் சூள் தவறினமையை அறிவுறுத்தியது.
(பி-ம்) 1 ‘தோணெகிழவும்? 2 ‘விட்ட வினையோ? ( 7 )