எ-து தலைமகன் வரைவுவேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர்
கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்
தொடு நின்றது.
(ப-ரை.) ‘நிரந்து இலங்கு அருவிய நெடுமலைநாடன்? என்றது
சேர்ந்தாருடன் இடையறாத நட்பையுடையான் எ-று.
குறிப்பு. நிரந்திலங்கு அருவி-இடையறாது வீழ்ந்து விளங்கு
கின்ற அருவி. இரந்து குறையுறானாய்ப் பெயரின்; குறை-காரியம்;
ஐந். எழு. 14. பெயரின்-நமர் மறுக்க நீங்கிச் சென்றால். நம் இன்
னுயிர்நிலை என்னாவதுகொல்; குறுந். 319 : 8. ( 8 )